அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்

பட்டீச்சரம் - 612703

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்

பட்டீச்சரம் - 612703

திருவிழாக்கள்

திருவிழாக்கள்


1. விசாகவிழா - வைகாசிவிசாகம்பிரம்மோற்சவம் 10 நாட்கள்நடைபெறும்:

1. விசாகவிழா - வைகாசிவிசாகம்பிரம்மோற்சவம் 10 நாட்கள்நடைபெறும்:

வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில் காலையில் பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு திருமலைராஜன் ஆற்றிற்கு சென்று தீர்த்தங் கொடுத்து அங்கிருந்து இரவில் மூர்த்திகள் விமானங்களில் புறப்பட்டுக் காட்சி கொடுத்துக் கோயிலுக்கு வந்து சேரும்.


2. முத்துப்பந்தல்விழா: [முக்கிய திருவிழா]

2. முத்துப்பந்தல்விழா:

ஆணி மாதம் முதல் தேதியில் திருஞானசம்பந்தருக்குச் சுவபெருமான் பூத கணங்கள் மூலம் முப்பந்தல் அளிக்கும் விழா நடைபெறும். இதுவே இத்தலத்தின் சிறப்பு விழா. முப்பந்தல் விழா நாளில் பகல் 12 மணிக்கு திருஞானசம்பந்தர்அடியார்களுடன் திருச்சத்திமுற்றம் கோயில் சந்நிதியிலிருந்து முத்துப்பந்தலின் நிழலில் எழுந்தருளிப் பட்டீச்சரத்துக்கு வருதலும், பதிகம் பாடுதலும், திருமடத்துக்கு எழுந்தருளுதலும் ஆகிய காட்சிகள் நடைபெறும். அன்றிரவு திருஞானசம்பந்தர் முத்துப்பந்தலிலும், ஸ்ரீ ஞானாம்பிகை சமேத பட்டீச்சரப் பெருமான் முத்து விமானத்திலும் எழுந்தருளித் திருவீதி உலா வந்து காட்சி கொடுப்பர். இக்காட்சி கண்கொள்ளாக் காட்சியாக விளங்கும்.


3. ஆடிவெள்ளி:

3. ஆடிவெள்ளி:

ஆடிமாத ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கு கிழமைகளில் அம்பாளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும், சிறப்புக் கலைநிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக நடைபெறும். ஆடி 3வதுவெள்ளிக்கிழமை இரவு வாணவேடிக்கையுடன் துர்கை புறப்பாடு நடைபெறும்.


4. மார்கழிவிழா:

4. மார்கழிவிழா:

மார்கழி அமாவாசை நாளில் பஞ்ச மூர்த்திகள் வாகனங்களில் புறப்பட்டு வீதிவலம் வந்து கோடி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுப்பர். இராமருக்கு ஏற்பட்ட சாயஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற ஐதீகத்தின் காரணமாக இவ்விழா நடைபெறுகிறது.


5. மாதவிழாக்கள்:

5. மாதவிழாக்கள்:

சித்திரப்பூரனைநாளில் அபிஷேக ஆராதனைகள் நிகழும். ஆணியில் நடராஜர் திருமஞ்சனமும், ஆடிப்பூர நாளில் அம்மன் புறப்பாடும், ஆவணியில் நடராஜர் அபிஷேகமும், விநாயகர் சதுர்த்தியில் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். புரட்டாசியில் நடராஜர் அபிஷேகமும் நவராத்திரி விழாவும், 10ஆம் நாள் விஜயதசமி நாளில் அம்மன் புறப்பாடும், மார்கழித் திருவாதிரை நாளில் நடராஜருக்கு அபிஷேகமும், புறப்பாட்டுடன் ஊடல் தீர்த்தலும் நிகழும்.


கோயில் விவரங்கள்

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்

பட்டீச்சரம் -612 703

0435 - 2445227

விரைவு இணைப்புகள்

வரலாறு

திருவிழா

பூஜை

Designed by AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,

Designed by

AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,
Top